Skip to main content

விண்வெளியிலிருந்து பார்த்தால் படேல் சிலை எப்படி இருக்கும்... 

Published on 17/11/2018 | Edited on 17/11/2018
sardar


பிரதமர் மோடி கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு குஜராத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை திறந்து வைத்தார். 143வது சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவின் ஒற்றுமையை கொண்டாடும் விதமாக இந்த சிலை திறக்கப்பட்டது. சுமார் ரூ. 2900 கோடி செலவில் உலகின் உயர்ந்த சிலையான இந்த சிலை கட்டப்பட்டுள்ளது. குஜராத்திலுள்ள நர்மதா அணைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள இந்த சிலை திறப்பு விழாவை முன்னிட்டு இந்தியாவிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் தலைவர்கள் வந்து கலந்துகொண்டனர்.  இந்த சிலை திறக்கப்பட்ட பின்னர், ஒரு நாளுக்கு 15,000 பார்வையாளர்கள் வருவார்கள் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து இங்கு வந்து இந்த சிலையை உலக மக்கள் பார்த்து வருகின்றனர். 
 

இந்த சிலை திறந்த நிலையில், இச்சிலையின் பல்வேறு விதமான புகைப்படங்கள் வெளியாகி வந்தன. தற்போது அமெரிக்க நிறுவனம் ஒன்று இதுவரை வெளியான புகைப்படங்களை மிஞ்சும் அளவுக்கு சர்தார் வல்லபாய் படேலின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அது என்ன என்றால், விண்வெளியில் இருந்து டாப் ஆங்கிலில் இந்த சிலையின் புகைப்படத்தை படம் எடுத்து வெளியிட்டுள்ளது. ஸ்கை லாப் என்று சொல்லப்படும் இந்த நிறுவனம் தனது செயற்கை கோள் மூலம் இச்சிலையின் புகைப்படத்தை எடுத்துள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக குறித்து பயம்... சர்தார் வல்லபாய் படேல் படத்தை மாட்டிய காங்கிரஸ்!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

karnataka congress

 

கர்நாடகா காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர்கள் இரண்டு பேர், மைக் செயல்பாட்டில் இருப்பது தெரியாமல், அம்மாநில காங்கிரஸ் தலைவரின் ஊழல் குறித்து பேசியது தொடர்பான வீடியோ அண்மையில் வெளியாகி பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

தற்போது மீண்டும் அதேபோன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இந்திரா காந்தியின் நினைவுநாள் கூட்டத்தில் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவகுமாரும், சித்தராமையாவும் பேசிக்கொள்வது போல் வெளிவந்துள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவிவருகிறது.

 

அந்த வீடியோவில் இந்திரா காந்தியின் படம் மாட்டப்பட்டுள்ள நிலையில், சித்தராமையா, "இன்று வல்லபாய் படேலின் பிறந்தநாள். அவருடைய படம் இல்லையா?" என கேள்வி எழுப்புகிறார். அதற்கு காங்கிரஸ் தலைவர் சிவகுமார், "ஆமாம்.. இன்று அவரது பிறந்தநாளும்தான். ஆனால் நாம் அவரது படத்தை வைப்பதில்லை" என்கிறார்.

 

அதற்கு சித்தராமையா, "ஆனால் பாஜக இதை சாதகமாக்கிக்கொள்ளும்" என கூறுகிறார். இதனையடுத்து சிவகுமார், அங்குள்ள ஒருவரிடம் வல்லபாய் படேல் படம் இருக்கிறதா? எனக் கேட்டு, அதை எடுத்து வரச் சொல்கிறார். இதனைத்தொடர்ந்து வல்லபாய் படேல் புகைப்படம் அங்கு வைக்கப்படுகிறது.

 

இந்த வீடியோ தொடர்பாக காங்கிரஸ் கட்சியைப் பாஜக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

ரூ.2989 கோடி செலவில் உருவான சர்தார் வல்லபாய் சிலையின் வருவாய்!

Published on 04/02/2019 | Edited on 04/02/2019


சர்தார் வல்லபாய் படேலின் 143 பிறந்தாள் தினத்தையொட்டி நிறுவப்பட்ட உலகின் மிக உயர்ந்த சிலையை உருவாக்க ரூ. 2989 கோடி செலவு செய்யப்பட்டது. இது இந்தியா முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்தார் வல்லபாய் படேல் விடுதலைக்காகவும், இந்திய ஒற்றுமைக்காகவும் போராடியவர்தான் ஆனால் இங்கு மக்கள் இருக்கின்ற நிலையில் இவ்வளவு பெரிய பொருட்செலவு செய்த ஆடம்பரம் தேவைதானா என்று பலர் கேள்விகளை எழுப்பினார்கள். 
 

இதுபோல கேள்விகளுக்கு குஜராத் அரசாங்கம் கொடுத்த பதில், இது மிகப்பெரிய சுற்றுலாத் தளமாக மாறும் அதன்மூலம் பணம் ஈட்ட முடியும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் இன்று இதுகுறித்து மக்களவையில் தகவல் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அல்போன்ஸ், “குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையால் அரசுக்கு ஜனவரி 27 வரை ரூ.18.47 கோடி வருவாய் கிடைத்துள்ளது.ஓராண்டுக்கு தோராயமாக ரூ.50 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.