Published on 24/02/2022 | Edited on 24/02/2022
ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தநிலையில், இன்று காலை உக்ரைனை தாக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். மேலும் அவர், உக்ரைன் இராணுவத்தினர் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் எனவும், உக்ரைன் பிரச்சனையில் வெளிநாடுகள் தலையிட்டால், இதற்கு முன் சந்திக்காத அளவிற்கு பின்விளைவுகளை சந்திக்க நேரும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ரஷ்ய இராணுவம், உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியதால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தொட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ரஷ்யா, போரை தொடங்கியதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன.