எறும்பை விட சிறிய அளவிலான பறக்கும் குட்டி ரோபோவை அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் காற்று மாசை கண்டறிவதற்காக ரோபோ ஒன்றை நீண்ட நாட்களாக உருவாக்கி வந்தார்கள். அளவில் சிறியதாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் ஆராய்ச்சியாளர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுவந்தார்கள்.
இந்நிலையில் நீண்ட முயற்சிக்குப் பிறகு தற்போது சிறிய அளவிலான பறக்கும் ரோபோவை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அளவில் எறும்பை விட சிறியதாக இருக்கும் அந்த ரோபோ காற்று மாசை துல்லியமாகக் கண்டுபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். மனிதர்கள் கண்டுபிடித்த பறக்கும் கருவிகளிலேயே இதுதான் மிகச் சிறியது என ஆராய்ச்சியாளர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளார்கள்.