Published on 05/12/2018 | Edited on 05/12/2018

ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகளுக்கும், ராணுவ படையினருக்குமான மோதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தாலிபான்களை ஒடுக்கவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பாகிஸ்தான் உதவ வேண்டும் என கடிதம் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரிக்கை வைத்துள்ளார். பாகிஸ்தான் வெளியுறவு துறை அலுவலகத்தின் செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.