Published on 10/05/2022 | Edited on 10/05/2022
![red sky frozen in panic!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Bk79pTbIDQd3BW_8KKWJdarxQ-kRFdL6yvkdHZCht0c/1652184021/sites/default/files/inline-images/tryry45745.jpg)
திடீரென தோன்றிய செவ்வானம் சைனாவின் ஜூஸானை (Zhoushan) பீதியில் உறையவைத்தது என்றே சொல்லலாம்.
சைனாவின் மிக முக்கிய துறைமுக நகரமான ஜூஸானில் திடீரென வானம் முழுவதும் இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. வான் மண்டலம் முழுவதும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதிக புகைமூட்டத்தால் சூரிய ஒளி நிலப்பரப்பை அடைய முடியாததால் சிவப்பு நிறத்தில் வானம் காட்சியளித்ததாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த காட்சிகள் அங்குள்ள மக்ககளுக்கு சற்று பீதியையும், ஆச்சரியத்தையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.