ப்ளேபாய் நிறுவனர் ஹூக் ஹெப்னர் காலமானார்
உலக புகழ்பெற்ற ப்ளேபாய் இதழை தொடங்கிய ஹூக் ஹெப்னர், அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்தார். 1953-ம் ஆண்டு முதல், நிர்வாணப் படங்கள், கவர்ச்சியான படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் மூலம் உலக அளவில் இந்த இதழுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஹூக் ஹெப்னர் அவரின் வாழ்க்கையிலும் ப்ளே பாய்-ஆகவே திகழ்ந்து வந்தார். 3 பெண்களை மணம் முடித்த அவர், பல பெண்களுடன் காதல் கொண்டிருந்தாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், வயது முதிர்வின் காரணமாக, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலமானார். இந்த தகவலை ப்ளே பாய் இதழ் அதிகாரபூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.