Published on 28/02/2022 | Edited on 28/02/2022

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. போரால் உக்ரைன் நாட்டு மக்கள் 150க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், இரு தரப்பிற்கும் இடையே நடந்துவரும் மோதலில் 4,300 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்திருந்தது.
உக்ரைன் தெரிவித்த இந்தப் பலி எண்ணிக்கை குறித்து ரஷ்யா எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், தற்போது முதன்முறையாக உக்ரைன் போரில் தங்கள் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததை ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. அதே நேரத்தில் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்து ரஷ்யா எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.