உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 33 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 35,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
British police hope to unmask mysterious 'plague doctor' seen during coronavirus lockdown. https://t.co/O4feSkezYj pic.twitter.com/Yt3JcFfjmM
— ABC News (@ABC) April 30, 2020
வளர்ந்த நாடுகள் கடுமையான முயற்சி எடுத்தும் கரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறுகின்றன. இதுஒருபுறம் என்றால் கரோனா தொடர்பான வதந்திகள் மறுபுறம் சுழன்றடித்து வருகின்றன. இதனால் எதை பார்த்தாலும் ஒருசாரருக்கு பயம் ஏற்படுகின்றது. இதை உறுதி செய்வது போலவே இங்கிலாந்தின் நர்வீச் நகரில் பழங்காலத்தில் மனிதர்கள் அணியும் கோட், பூட்ஸ், கையுறை முதலியவற்றை அணிந்துகொண்டு சாலையில் சென்ற ஒருவரை பார்த்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்து போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தினந்தோறும் அந்த மனிதர் அந்த பகுதிக்கு வருவதாகவும் தங்களுக்கு பயமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால், சில நூற்றாண்டுகள் முன்பு மனிதர்கள் அணியும் ஒருவித உடையே அவர் அணிகிறார் என்றும் அவரை நாங்கள் தேடுகிறோம், ஆனால் அவர் குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.