Skip to main content

கொலை செய்யப்பட்ட பிரபல நடிகை... சகோதரனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்...

Published on 27/09/2019 | Edited on 27/09/2019

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது இந்தியாவில் பிரபலமானவர் பாகிஸ்தான் நடிகை மற்றும் மாடலான குவான்டீல் பலூச்.

 

pakistani actress case verdict

 

 

அந்த போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக அவர் பதிவிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, அவரை இணைய பிரபலமாகியது. மேலும், போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அப்ரிடி என்ன சொன்னாலும் அதை நான் செய்வேன் எனவும் அந்த வீடியோவில் குவான்டீல் பலூச் அறிவித்திருந்தார். அவரின் இந்த வீடியோவுக்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த சூழலில், 2016 ஜூலை 15 அன்று அவர், அவரது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு குடும்ப கவுரவத்தை சீர்குலைத்ததால் கழுத்தை நெறித்து, அவரை கொன்று விட்டதாக குவான்டீல் பலூச்சின் சகோதரர் முஹம்மது வாசிம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குவான்டீல் பலூச்சின் சகோதரர் முஹம்மது வாசிமுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்