Published on 16/06/2020 | Edited on 16/06/2020

புகழ்பெற்ற 93- ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2021- ஆம் ஆண்டு ஏப்ரல் 25- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸில் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 28- ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடக்கவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளில் முதல்முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கரோனா காரணமாக சர்வதேச அளவில் தியேட்டர்கள் மூடப்பட்டு திரைப்படங்கள் வெளியாகாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டவர்களின் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.