Skip to main content

இந்தியாவில் 1 ஜி.பி. டேட்டா ரூ.18 மட்டுமே...! ஜியோ எஃபெக்ட்...?

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

குறைந்த விலையில் அதிக மொபைல் டேட்டா கொடுக்கும் நாடுகளில் இந்தியா, உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 1 ஜி.பி. டேட்டாவிற்கு மக்கள் ஒரு நாளுக்கு சராசரியாக ரூ. 18 மட்டுமே செலவிடுகின்றனர். அதே உலக அளவில் 1 ஜி.பி. டேட்டாவிற்கு மக்கள் சராசரியாக ரூ. 600 செலவிடுகின்றனர். 

 

data

 

லண்டனைச் சேர்ந்த Cable.co.uk. எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 28-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில், 230 நாடுகளில் இருந்து 6,313 மொபைல் டேட்டா பிளான்களை அந்நிறுவனம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. அதில் இந்தியாதான் குறைந்த விலையில் அதிக டேட்டா தரும் நாடாக முதலிடத்தில் இருக்கிறது. 
 

இந்தியாவில் 57 டேட்டா பிளான்கள் 1 ஜி.பி. டேட்டாவை ஒரு நாளுக்கு குறைந்தது ரூ. 1.41-க்கும் அதிகப்பட்சம் ரூ. 98.83-க்கும் தருவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் இந்தியா (ரூ.18), கிர்கிஸ்தான் (ரூ.19.5), கஜகஸ்தான் (34.57), உக்ரைன் (ரூ.35.98) மற்றும் ரூவாண்டா (39.51) என இருக்கிறது. 
 

இதுவே பிரிட்டனில் 1 ஜி.பி. டேட்டா ரூ. 469.88-க்கும், அமெரிக்காவில் 1 ஜி.பி. டேட்டா ரூ. 872.73-க்கும் கிடைக்கிறது என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. உலகிலே அதிக விலையில் டேட்டா பெறும் நாட்டுகளில் ஜிம்பாப்வே முதலிடத்தில் உள்ளது. அங்கு 1 ஜி.பி. டேட்டாவிற்கு மக்கள் சராசரியாக ரூ. 5305.55 செலவிடுகிறார்கள் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  
 

2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜியோ அறிமுகமானதிலிருந்து டேட்டா பயன்பாட்டில் அதிக மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக இலவச 4ஜி டேட்டா என்ற அறிவிப்பு மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் விலைகளை மாற்றி அமைக்கும் அளவிற்கு எடுத்து சென்றுள்ளது.
 

2018-ம் ஆண்டில் நவம்பர் மாதம் இறுதி முதல் டிசம்பர் மாதம் இறுதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ புதிதாக 85.6 இலட்சம் பேரை தன் சந்தாதாரர்களாக சேர்த்துள்ளது என்று  மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், 20-2-19 அன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

 

 

சார்ந்த செய்திகள்