![orange](http://image.nakkheeran.in/cdn/farfuture/czV_PD-t1MDJU9yCPvlpBHWIMADjvV_ZYlPIaLciiHM/1533347666/sites/default/files/inline-images/orange.jpg)
பனி மழை என்றால் வெள்ளையாகவே பார்த்து பழகிய ஐரோப்பிய மக்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை புதிய அனுபவம் காத்திருந்தது.
ஆம், ஆரஞ்சு நிறத்தில் பனி மழை பெய்தால் அவர்களுக்கு புதிய அனுபவம்தானே. அது ஏன் திடீரென்று பனி மழையின் நிறம் ஆரஞ்சு ஆகியது. இப்படி ஆவது சாத்தியம்தான் என்கிறது இங்கிலாந்து வானிலை ஆராய்ச்சி நிலையம்.
ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள பரந்த சஹாரா பாலைவனத்தில் ஏற்படும் புயல் காரணமாக மேலே சுழன்று எழும் மணலும் தூசும் பனியில் கலந்ததால் இந்த நிற மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அந்த நிலைய அதிகாரிகள் தெரிவித்தன.
வரலாற்றில் பனி மழை நிறம் மாறுமளவுக்கு மணல் மேலே எழும்பியிருப்பது இதுவே முதல்முறை என்று ஏதென்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்யா, பல்கேரியா, உக்ரைன், ரொமானியா, மால்டோவா ஆகிய நாடுகளில் இத்தகைய ஆரஞ்சு பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.