உலகில் எந்தவிதமான உயிரினமும் வாழமுடியாத ஒரு பகுதியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
Nature Ecology and Evolution என்ற அறிவியல் சார்ந்த தகவல்களை வெளியிடும் பத்திரிகையில் அண்மையில் ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில், ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியாவில் உள்ள டல்லோல் என்ற பகுதியில் எந்தவித உயிரினங்களும் வாழ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் டல்லோலில் பல சோதனைகளை மேற்கொண்டு, அப்பகுதியில் எந்தவித உயிர்களோ அல்லது நுண்ணுயிரிகளோ கூட இல்லை என்பதைக் கண்டறிந்தனர். பூமியின் மிக தீவிரமான சூழல்களில் ஒன்றான டல்லோலில் நம்பமுடியாத அளவுக்கு வெப்பம், உப்பு மற்றும் அமிலத்தன்மை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு சில எரிமலை பள்ளங்களிலிருந்து விஷவாயுக்கள் வெளியாவதாகவும், தீவிர நீர் வெப்ப செயல்பாடு அரங்கேறுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.