செங்கல்பட்டு மாவட்டம் புலியூர் பஞ்சாயத்து அச்சரவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வீரராகவன் என்ற முதியவர். இந்த நிலையில், அச்சரவாக்கம் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் விறகு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, குளவி ஒன்று வீரராகவனை கொட்டியுள்ளது. இதனால் பதறிப்போன வீரராகவனை அப்பகுதியினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிக்கிச்சைகாக அனுமதித்தனர். ஆனால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வீரராகவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் வீரராகவன் குளவி கொட்டி இறந்ததை அறிந்த புலியூர் ஊராட்சி மக்கள் அந்தப் பகுதியில் 100 நாள் வேலை செய்வதற்கு அச்சமடைந்துள்ளனர். அந்தப் பகுதியில் பல்வேறு இடங்களில் குளவிகள் கூடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அந்தப் பகுதியில் செல்வதற்கு மச்சம் அடைகின்றனர். குறிப்பாக 100 நாள் வேலை செய்வதற்கு பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.