77 வயது முதியவர் ஒருவர் தன்னிடம் திருட வந்த திருடனை அடித்து துவைத்த சம்பவம் இங்கிலாந்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் கார்டிப் நகரை சேர்ந்தவர் 77 வயதான முதியவர் ஜெஸ்டின். முன்னாள் ஆசிரியரான இவர், நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள ஏடிஎம் நிலையத்தில் இருந்து பணம் எடுத்துள்ளார். மேலும் பணம் சரியாக இருக்கின்றதா என்று அந்த ஏடிஎம் மையத்திற்கு வெளியில் நின்று அதனை எண்ணிப் பார்த்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர் அதனை பார்த்துள்ளார்.
முதியவரிடம் உள்ள பணத்தை பறித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவரிடம் வந்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். ஆனால் அதற்கு சிறிதும் அசையாக அவர், திருடனை சரமாரியாக தாக்கியுள்ளார். முதியவரின் இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத அவர், அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளார். இந்த சம்பவம் அனைத்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.