உலகத்தையே முடக்கி போட்ட கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், அண்மையில் மீண்டும் கொரோனாவின் பாதிப்பு அதன் பிறப்பிடமாக கூறப்படும் சீனாவில் அதிகரித்து இருந்தது. அதன் காரணமாக அங்கு மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சீனாவின் பல நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், சீனாவைத் தொடர்ந்து வட கொரியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய கொரோனா அலையின் பொழுது பாதிப்புகள் குறித்து எதுவும் வாய்திறக்காத வடகொரியா இந்த முறை வெளிப்படையாக கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதையும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் தெரிவித்துள்ளது. ஐந்து நாட்களுக்கு தலைநகரில் ஊரடங்கு இருக்கும். எனவே, பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என வடகொரியா அரசு அந்நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது.