Published on 20/08/2019 | Edited on 20/08/2019
அமெரிக்க கொலம்பிய மாகாணத்தில் போர்லாண்ட் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 9 செவிலியர்கள் திருமணமாகி அவர்களது கணவர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் கடந்த வருடம் அடுத்தடுத்து கர்ப்பமாகி உள்ளனர். இவர்கள் 9 பேரும் அடுத்தடுத்து கர்ப்பமானது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தற்போது இவர்கள் அனைவரும் சில வார இடைவெளியில் குழந்தைகளை பெற்றுள்ளனர்.
தற்போது இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இவர்கள் பணிபுரிந்த மருத்துவமனையே இவர்களது பிரசவ செலவை ஏற்றுள்ளது. அதோடு மருத்துவமனையில் செவிலியர்கள் வேலை காலியாக உள்ளது எனவும் விளம்பரப்படுத்தியுள்ளது. குழந்தை பேறு வேண்டுபவர்கள் இந்த மருத்துவமனையை நாடலாம் போல என்று இணையத்தில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.