Published on 09/01/2021 | Edited on 09/01/2021

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவிலிருந்து கிளம்பிய விமானம், நடுவானில் பறந்தபோது மாயமாகியுள்ளது.
விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே, தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன், ரேடாரில் இருந்தும் மறைந்ததாக இந்தோனேசியா அறிவித்துள்ளது.
ஸ்ரீவிஜயா நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில், விமானிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பயணித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், அந்தநாட்டின் கடலில் விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால், மாயமான விமானம் விபத்தில் சிக்கியிருக்கோமா என அஞ்சப்படுகிறது. மேலும், அந்த விமானத்தில் பயணித்தவர்களின் நிலைகுறித்து அச்சம் எழுந்துள்ளது.