Published on 23/10/2018 | Edited on 23/10/2018
விண்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களுக்கு அறிவியலாளர்கள் சில உருவங்களோடு ஒப்பிட்டு பெயர் சூட்டுவார்கள். காமா கதிர் டெலஸ்கோப்புகள் மூலமாக நட்சத்திரங்களை புள்ளிகளாக இணைத்து இந்த உருவங்களை உருவாக்குவார்கள். அந்த வகையில் கற்பனைக் கதாபாத்திரங்களான ஹல்க், காட்ஸில்லா ஆகியவற்றின் பெயரை சில நட்சத்திரக் கூட்டங்களுக்கு சூட்டியுள்ளனர். பாரீஸ் ஈபிள் டவர், டயர் போன்ற பல உருவங்களை ஏற்கெனவே உருவாக்கி பெயர் சூட்டியுள்ளனர்.