ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வேலை, படிப்பு, சுற்றுலா, மருத்துவம் என எது தொடர்பாகச் சென்றாலும், அதற்கான விசாவை பெறவேண்டியது அவசியம். அப்படி பெறப்படும் விசாவில் சம்பந்தப்பட்ட நபர் எதற்காக அந்த நாட்டிற்கு வந்துள்ளார். எவ்வளவு நாட்கள் அங்கு தங்குவதற்கு அவருக்கு அனுமதி உள்ளது என்பன உள்ளிட்ட விவரத்தை சம்பந்தப்பட்ட நாடு அறியும். இதன் மூலம், சட்டவிரோத நடவடிக்கைகள், சட்டவிரோத குடியேற்றம் ஆகியவை தடுக்கப்படும்.
இந்நிலையில், தற்போது இலங்கை அரசு இந்தியா உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதற்கு விசா தேவையில்லை என அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் இனி விசா இன்றி வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது தற்காலிகமானது என்றும் இந்த நடைமுறை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே பின்பற்றப்படும் என்றும் அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக இது சோதனை முயற்சி என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.