பாகிஸ்தானில் திருநங்கைகள் பாதுகாப்பிற்கு புதிய சட்டம்!
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் திருநங்கைகள் பாதுகாப்பிற்காக புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
உலக அளவில் திருநங்கைகளை அங்கீகரித்த நாடுகளில் பாகிஸ்தானும் அடங்கும். 2009-ல் பாகிஸ்தான் திருநங்கைகளை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. அவர்களுக்கு அடையாள அட்டைகளும், தேர்தலில் வாக்களிக்குக் உரிமையும் வழங்கப்பட்டது. பாகிஸ்தான் மக்கள்தொகையில் 5 லட்சம் பேர் திருநங்கைகள் என ஒரு தகவல் தெரிவிக்கிறது.
திருநங்கைகளின் பாதுகாப்புச் சட்டம்-2017 என்ற சட்டம் சமீபத்தில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதை நயிமா கிஷ்வார் என்பவர் அறிமுகப்படுத்தினார். இந்த சட்டத்தின் படி திருநங்கைகளை உடல், பாலியல், வார்த்தை, உணர்வு மற்றும் பொருளாதார ரீதியில் சீண்டுபவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களை வீட்டுவேலையில் இருந்து நிறுத்துவது, தாக்குவது, காயப்படுத்துவது போன்ற குற்றங்களில் இருந்து இந்த சட்டம் பாதுகாக்கிறது.
- ச.ப.மதிவாணன்