Skip to main content

நெதர்லாந்து பிரதமர் திடீர் ராஜினாமா!

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

netharland pm resign his post

 

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

நெதர்லாந்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மார்க் ரூட் பிரதமராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் புலம்பெயர்ந்தோர் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுக்குள் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி நிலவி வந்தது. இதனால் மார்க் ரூட் பிரதமராகத் தொடர்வதிலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதிலும் தொடர்ந்து குழப்பம் நிலவி வந்துள்ளது.

 

இந்நிலையில், இந்த மசோதா தொடர்பான விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து நெதர்லாந்து பிரதமராக மார்க் ரூட் தனது பதவியைத் தொடருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து அழுத்தங்கள் அதிகரித்துக்கொண்டே இருந்துள்ளன. இதையடுத்து மார்க் ரூட் இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். 150 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட நெதர்லாந்து நாடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெறும் எனத் தகவல் தெரிவிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்