Published on 12/04/2019 | Edited on 12/04/2019

ரஷ்யா நாட்டின் உயரிய விருதுகளின் ஒன்றான செயின்ட் அன்ட்ரூவ் விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தலைவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது தற்போது மோடிக்கு வழங்கப்பட உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதனை ரஷ்யாவிற்கான இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.