பல்கலைக்கழக நுழைவுத் தேர்வெழுத தனது இரண்டு மாத குழந்தையுடன் சென்றிருந்த இளம்பெண், அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
ஆஃப்கானிஸ்தானில் டேகுண்டி பகுதியில் உள்ளது நில்லி நகரம். இங்குள்ள நசீர்கோஸ்ராவ் பல்கலைக்கழகத்தில் உள்ள சமூகவியல் பாடப்பிரிவுக்கான நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வெழுத தனது இரண்டு மாத குழந்தையையோடு வந்திருந்தார் 25 வயதான ஜஹான் தாப்.
Inspiring photo from social media: this mother is taking university entrance exam while taking care of her child, in Daikundi. Afghan women are unstoppable. pic.twitter.com/lus0eeuH48
— Shaharzad Akbar (@ShaharzadAkbar) March 19, 2018
முதலில் இருக்கையில் அமர்ந்து தேர்வெழுதிக் கொண்டிருந்த ஜஹான், குழந்தை அழத் தொடங்கியதும், அதிலிருந்து இறங்கி வெறும் தரையில் சம்மனம் இட்டு அமர்ந்து தன் தேர்வைத் தொடர்ந்தார். அதேசமயம், தனது குழந்தையின் அழுகையையும் நிறுத்தினார். இதைக் கவனித்த தேர்வறை கண்காணிப்பாளர் யஹ்யா எர்ஃபான் தனது செல்போனின் மூலம் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். நெட்டிசன்களிடன் பெரிதும் பாராட்டைப் பெற்ற இந்தப் புகைப்படம், அதிவேகமாக வைரலானது. தற்போது ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் ஜஹான் கல்வியைத் தொடர முன்வந்துள்ளது.