Skip to main content

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த தாய்... ஆம்புலன்ஸ் பின்னால் ஓடிவந்த மகள்!

Published on 05/02/2020 | Edited on 05/02/2020


சீனாவில் வுஹான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. நோய் பரவுவதை தடுக்க சில நாடுகள் சீனாவுக்கான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. 



உலக நாடுகள் பலவும் அந்த வைரஸ் கிருமிக்கு மாற்று மருந்து கண்டுபிடிக்க போராடி வருகின்றன. இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் காரணமாக பலியாகியுள்ளார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக வுஹான் மாகாணத்தில் பெண் ஒருவர் பலியான நிலையில், அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனை ஊழியர்கள் ஏற்றியுள்ளனர். அப்போது அவருடை மகள் வாகனத்தின் பின்னால் ஒடிவருவதை கண்ட செவிலியர்கள், அவரை தடுத்தி நிறுத்தி ஆம்புலன்ஸை எடுத்து சென்றுள்ளனர். 
 

 

சார்ந்த செய்திகள்