Skip to main content

அண்டை நாட்டின் 10 ஆயிரம் கோடி கடனை அடைக்கும் இந்தியா

Published on 18/12/2018 | Edited on 18/12/2018

 

mod

 

இந்தியா சீனா இடையிலான வர்த்தகப் போரின் ஒரு கட்டமாக இரு நாடுகளும் தங்களை சுற்றி உள்ள நாடுகளின் நட்புறவை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் இந்தியா பிரதமர் மோடி மற்றும் மாலத்தீவு அதிபர் முஹமது சாலிஹ் இடையிலான சந்திப்பு நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதற்கு முந்தைய மாலத்தீவு அதிபர் சீனாவுடன் மேற்கொண்ட கட்டுமான ஒப்பந்தங்கள் மூலம் சீனாவிற்கு 20 ஆயிரம் கோடி கடன் தர வேண்டிய நிலையில் இருந்தது மாலத்தீவு. இதற்கு உதவும் பொருட்டு மாலத்தீவிற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியா சார்பில் வழங்கப்பட உள்ளதாக நேற்று நடந்த சந்திப்பிற்கு பின் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வர்த்தகம், பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்