பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வாரா பிரதமர் மோடி?
தோக்லாம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவரும் நிலையில், சீனாவில் நடக்கவிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் மோடி கலந்துகொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பதிலளித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர ஹூவா சுன்யுங், அடுத்த மாதம் நடக்கவிருக்கும் மாநாட்டிற்கான வேலைகள் வெகுசிறப்பாக நடந்து வருகின்றன. இறுதிகட்டத்தை எட்டும் நிலையில் உள்ளன என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கலந்துகொள்வாரா? என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல், பிரிக்ஸ் மாநாடு அதன் உறுப்பு நாடுகளின் ஒருங்கிணைப்போடு வெற்றி பெறும் மற்றும் அடுத்தகட்ட உயர்வை எட்டும் என சீனா நம்புவதாக அவர் தெரிவித்தார்.
தோக்லாம் பகுதியில் அத்துமீறி நுழைந்துள்ள இந்தியப்படை அதன் உபகரணங்களை அப்புறப்படுத்த வேண்டும். அதுவே, நிலையை சமநிலைக்குக் கொண்டுவருவதற்கான தீர்வு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் மாநாடு சீனாவில் உள்ள ஜியாமென் பகுதியில் வைத்து நடைபெறவுள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தேன் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பே பிரிக்ஸ்.
- ச.ப.மதிவாணன்