நியூசிலாந்தில் பெருகி வரும் நோயை கட்டுப்படுத்துவதற்காக ஒரு லட்சம் பசுக்களை ஒரே நேரத்தில் கொல்ல திட்டமிட்டுள்ளனர். பசுக்களுக்கு மைகோபிளாஸ்மா போவிஸ் என்ற நோய் பரவுவதை கண்டறிந்தனர், 2017 ஜூலை மாதத்தில்தான் இது அதிகளவில் நியூசிலாந்தில்தான் பரவுகின்றது என்ற விஷயம் கண்டறியப்பட்டது. மேலும் இந்த நோய் தெற்கு நியூசிலாந்திலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக வடக்கு நோக்கி பரவுவதையும் கண்டறிந்தனர். இதைக்கட்டுப்படுத்துவதற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருந்தும் இந்த நோய் தொடர்ந்து பரவிக்கொண்டே இருந்ததால் வேறு வழியின்றி இந்த நோயை கட்டுப்படுத்துவதற்காக ஒரு லட்சம் பசுக்களை ஒரே நேரத்தில் கொல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதுபற்றி நியுசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன் கூறியது, நியூசிலாந்தின் முக்கிய ஏற்றுமதி பொருட்கள், பால் பொருட்கள். நம் நாட்டில் மொத்தம் இலட்சம் பசுக்கள் உள்ளன. மைகோபிளாஸ்மா போவிஸ் என்ற நோய் பரவுவதை தடுப்பதற்காகவும், அந்த நோயை அழிப்பதற்காகவும் ஒரு இலட்சம் பசுக்களை கொல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். இவ்வளவு பசுக்களை கொல்ல விருப்பமில்லை என்றாலும் மற்ற பசுக்களை காப்பதற்காக இதை செய்ய வேண்டியது உள்ளது. மக்கள் அரசுக்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.