அணுஆயுத சோதனைத்தடை ஒப்பந்தம்- உலக நாடுகளுக்கு குத்தேரஸ் அழைப்பு!
விரைவில் நடைமுறைப்படுத்தப் படவுள்ள விரிவான அணு ஆயுத சோதனைக்கான தடை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள, இந்தியா உட்பட சர்வதேச நாடுகளுக்கு ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக வடகொரியா தொடர் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் போர்ப்பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள ஐநா பொதுச்செயலாளர் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 70 ஆண்டுகளில் தெற்கு பசிபிக்கில் இருந்து வட அமெரிக்கா வரையிலும், மத்திய ஆசியாவில் இருந்து வட ஆப்பிரிக்கா வரையிலுமாக 2,000 அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சோதனைகளால் பல அப்பாவி மக்களும், ஒப்பற்ற சுற்றுச்சூழலும் மிகப்பெரிய பாதிப்புகளைச் சந்தித்துள்ளது எனக் கூறியுள்ள அவர்,
கொரிய குடியரசின் தொடர் அணுஆயுத சோதனை கடுமையான விதிமுறைகளை விட தடையே சரியான மாற்று என நிரூபித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்