Skip to main content

நாடாளுமன்றத்திற்கு கைக்குழந்தையை அழைத்து வந்ததற்காக வெளியேற்றப்பட்ட பெண் எம்பி...

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

கென்யாவில் பெண் எம்பி ஒருவர் தனது குழந்தையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்ததால் வெளியேற்றப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

kenya

 

 

மூன்று குழந்தைகளுக்கு தயாரான சுலைக்கா ஹசன் என்ற பெண் எம்பி நேற்று தனது ஐந்து மாத குழந்தையை பிறரிடம் ஒப்படைக்க முடியாத காரணத்தால் தூக்கிக்கொண்டு நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கிறார். ஹசன் குழந்தையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்ததால் காவலர்கள் முதலில் தடுத்து நிறுத்தியுள்ளனர். இவர்களை மீறி எப்படியே ஹசன் குழந்தையை தன்னுடனே எடுத்துக்கொண்டு நாடாளுமன்ற அவையில் அமர்ந்திருக்கிறார். அப்போது  நாடாளுமன்ற துணை சபாநாயகர் கிறிஸ்டோபர் வெளியே செல்லுமாறு உத்தரவிட்டார்.
 

குழந்தையை வெளியே யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு அவைக்கு வருமாறு உத்தரவிட்டார். ஹசன் தன்னுடைய குழந்தையை அவைக்கு அழைத்து வந்ததற்கு நாடாளுமன்றத்திலுள்ள சில ஆண் உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஹசனின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர் குழந்தையுடன் வெளியேறினார்.
 

நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேறிய பின் ஹசன், “நான் என் குழந்தையை முடிந்த அளவு நாடாளுமன்றதுக்கு அழைத்து வரக் கூடாது என்றுதான் முயற்சித்தேன். ஆனால் இன்று என்னால் அதைத் தவிர்க்க முடியவில்லை. ஒருவேளை நாடாளுமன்றத்தில் குழந்தைகளைப் பாத்துக் கொள்ளக் கூடிய காப்பகம் இருந்தால் நான் குழந்தையை அங்கு விட்டிருப்பேன். இந்த நாட்டில் வேலைக்கு செல்லும் அனைத்துப் பெண்களும் இந்த துயரத்தை எதிர்கொள்கிறார்கள். எல்லோராலும் குழந்தையைப் பார்த்துக் கொள்ளப் பணியாட்களை வைத்துக் கொள்ள முடியாது. தனியார் நிறுவனங்களில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கான வசதிகள் உள்ளன. நாட்டின் உயர்ந்தச் சட்ட அமைப்பான நாடாளுமன்றம் இதுபோன்ற விஷயங்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். பெண்கள் அரசியலுக்கு அதிகம் வர வேண்டுமெனில், நாடாளுமன்றம் அவர்களுக்கு குடும்ப உணர்வை தரக் கூடிய நட்புறவான சூழலை உருவாக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்