உலக புகழ்பெற்ற பிக் பென் கடிகாரத்தின் பராமரிப்புக்கு ரூ.742 கோடி செலவு செய்யப்படும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டினின் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எலிசபெத் கோபுரத்தில் உச்சியில், கடந்த 1856-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கடிகாரம் உலகப்புகழ் வாய்ந்தது எனலாம். 315 அடி உயர கோபுரத்தில் 23 அடி விட்டதில் அமைக்கப்பட்டுள்ள இந்த கடிகாரத்தின் மணிகளின் எடை 13.7 டன்னாகும். 150 ஆண்டுகளை கடந்து ஓயாமல் சூழன்றுகொண்டிருந்த இந்த கடிகாரம் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகளுக்காக கடந்த 2017 ஆகஸ்டில் நிறுத்திவைக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டுவரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் எனவும், கடிகார பழுது பணிக்காக ரூ.400 கோடி ஒதுக்கப்படும் எனவும் பிரிட்டன் அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இதற்கான செலவு திட்டமிடப்பட்டதைவிட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடிகார பழுது பணிக்காக ரூ.742 கோடி செலவிடப்படும் என்று அந்த நாட்டு அரசு தற்போது அறிவித்துள்ளது.