Published on 24/06/2021 | Edited on 24/06/2021
மெக்காஃபி என்ற வைரஸ் தடுப்பு மென்பொருளை உருவாக்கியவர் ஜான் மெக்காஃபி. மெக்காஃபி என்ற பெயரிலேயே இவர் மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த சூழலில் அவர் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கினார். இதனைத்தொடர்ந்து அவர் அமெரிக்காவில் இருந்து தப்பினார்.
அமெரிக்காவில் இருந்து தப்பி சென்ற அவர், பார்சிலோனா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு ஸ்பெயின் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந் வழக்கில் நேற்று ஜான் மெக்காஃபியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஸ்பெயின் நீதிமன்றம் அனுமதியளித்தது. இந்தநிலையில் ஜான் மெக்காஃபி சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜான் மெக்காஃபிக்கு தற்போது 75 வயது என்பது குறிப்பிடத்தக்கது.