Published on 21/04/2021 | Edited on 21/04/2021

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜப்பான் நாட்டிலும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, ஏற்கனவே திட்டமிடபட்டிருந்த தனது இந்திய, பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கு பதிலாக பிரதமர் யோஷிஹைட் சுகா, ஜப்பானில் மீண்டும் அதிகரித்து வரும் கரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடப்போவதாக ஜப்பான் ஊடகங்கள் கூறியுள்ளன. ஏற்கனவே கரோனா அதிகரிப்பு எதிரொலியால், இங்கிலாந்து பிரதர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.