குழந்தைக்கு பெனிட்டோ முசோலினி என்ற பெயரை சூட்ட இத்தாலி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இத்தாலியின் பிரதமராக இருந்தவர் தேசிய பாசிஸ்ட் கட்சியின் தலைவரான பெனிட்டோ முசோலினி. ஒரு நாட்டின் பிரதமர் என்பதையும் தாண்டி தனது மோசமான சர்வாதிகார குணத்தாலும், பாசிச ஆட்சிமுறையாலும் உலக மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தவர் அவர்.
இந்நிலையில், இத்தாலியில் சமீபத்தில் பிறந்த குழந்தைக்கு பெனிட்டோ முசோலினி என்ற பெயரை அதன் பெற்றோர் சூட்டியுள்ளனர். இந்த செய்தி கூடிய விரைவில் ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் பரவின. குழந்தையின் எதிர்காலம் மற்றும் அதற்குக் கிடைக்கவேண்டிய நல்வாழ்வுத் திட்டங்கள் இந்த பெயரினால் தடைப்படலாம் என விவாதங்கள் நடைபெற்றன.
இதுதொடர்பாக இத்தாலி நீதிமன்றம் தாமாக முன்வந்து, குழந்தைக்கு பெனிட்டோ முசோலினி என்ற பெயரை வைக்க தடைவிதித்தது. ஆனால், இத்தாலியில் வம்சாவளியின் பெயரைப் பயன்படுத்தும் வழக்கப்படியே, குழந்தையின் தாத்தா பெயரான முசோலினியை வைத்துள்ளதாக பெற்றோர் தரப்பு வாதிட்டது. இருப்பினும், இத்தாலி நீதிமன்றம் தமது தீர்ப்பினை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டது.