Skip to main content

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரிப் இன்று மேல்முறையீடு?

Published on 16/07/2018 | Edited on 16/07/2018

 

nawas

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவாஸ் ஷெரிப் , ஊழல் செய்து சம்பாரித்த பணத்தில் லண்டனில் 'அவன்பீல்டு' சொகுசு வீடுகள் வாங்கியுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் அவரும், அவரது மகள் மரியம், அவரது மருமகன் கேப்டன் சப்தாரும் தண்டிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நீதிமன்றம் நவாஸ் ஷெரிப்பிற்கும் அவரது மகளுக்கும் 10 ஆண்டுகாலம் சிறை என்று தீர்ப்பளித்துள்ளது. அதனைத்தொடர்ந்து இவ்விருவருக்கும் பி வகுப்பு சிறை கொடுக்கப்பட்டது. இருந்தாலும் இவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்துவிட்டனர்.

 

ராவல்பிண்டியில் உள்ள அந்த சிறையில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி லண்டனில் இருந்து வந்தவுடனே அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டதை தொடர்ந்து, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை எதிர்த்து நவாஸ் மற்றும் அவரது மகள் மேல்முறையீடு செய்யவுள்ளனர். இது சம்மந்தமாக நேற்று நவாஸின் வழக்கறிஞர்கள் முக்கிய ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.          

 

சார்ந்த செய்திகள்