ஈரான் மீது அமெரிக்கா விதித்த கடுமையான பொருளாதார தடை முழுவீச்சில் அமலுக்கு வந்தது. நவம்பர் 4-ஆம் தேதிக்குள் ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தை உலக நாடுகள் முறித்துக்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு முன் தளர்த்தப்பட்ட அனைத்து தடைகளையும் ஈரான் மீது மீண்டும் விதிப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ஈரானுடனான ஒப்பந்தத்தை தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளன. இந்தத் தடை காரணமாக ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி 10 இலட்சம் பேரல் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஈரான் அதிபர் ஹஸன் ரொஹானி, தடைகளை தகர்தெறிந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் தொடர்ந்து ஈடுபடப்போவதாக அமெரிக்காவுக்கு சவால் விடுத்துள்ளார்.