Skip to main content

ரோஹிங்யாக்களின் மீதான தாக்குதலுக்கெதிரான ஐநா குழு தலைவராக இந்திரா ஜெய்சிங்!

Published on 07/09/2017 | Edited on 07/09/2017
ரோஹிங்யாக்களின் மீதான தாக்குதலுக்கெதிரான ஐநா குழு தலைவராக இந்திரா ஜெய்சிங்!

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிரான கண்காணிப்புக்குழு தலைவராக இந்திரா ஜெய்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

மியான்மர் நாட்டில் ராக்கைன் பகுதியில் ரோஹிங்யா கிளர்ச்சியாளர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு மையங்களின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 12 காவல்துறையினர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்குள்ள ரோஹிங்யா முஸ்லிம்களின் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தத் தாக்குதல்களால் 1.5 லட்சம் ரோஹிங்யாக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பியோடிவிட்டனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல்களைக் கண்காணிக்க ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மூன்றுபேர் கொண்ட இந்த கண்காணிப்புக் குழுவின் தலைவராக இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த குழுவில் இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையத் தலைவர் ராதிகா குமாரசாமி மற்றும் மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் கிறிஸ்டோபர் டோமினிக் சிடோட்டி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு மியான்மர் பாதுகாப்புப் படையினரால் ரோஹிங்யா முஸ்லிம்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள் குறித்து விசாரணை நடத்தும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ச.ப.மதிவாணன் 

சார்ந்த செய்திகள்