Skip to main content

அதிக வாக்குகள் பெற்று இந்தியா அமோக வெற்றி!!!

Published on 13/10/2018 | Edited on 13/10/2018
un human rights


ஐநா மனித உரிமைகள் குழு தேர்தலில் இந்தியா அமோக வெற்றி அடைந்து, அந்த குழுவில் உறுப்பினராக இணைந்துள்ளது. இத்தேர்தலில் வெற்றிப்பெற்றதன் மூலம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியில் ஆரம்பித்து மூன்று வருடத்திற்கு உறுப்பு நாடாக இந்தியா பதவி வகிக்கும்.
 

ஐநா மனித உரிமை குழுவிற்கு புதிய நாடுகளை தேர்ந்தெடுக்க ஓட்டெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் ஆசிய பசிபிக் நாடுகள் பிரிவில் இந்தியா போட்டியிட்டது. ஐநாவின் 193 உறுப்பு நாடுகளில் இந்தியாவுக்கு 188 வாக்குகள் இத்தேர்வில் கிடைத்துள்ளன. இந்த மனித உரிமை குழுவில் உறுப்பு நாடாக 97 வாக்குகள் பெற்றாலே போதுமானது. ஆனால், இந்தியா அமோக வாக்குகள் பெற்று உறுப்பினாரக இணைந்துள்ளது. 
 

இதற்கு முன்பு இந்தியா இரண்டு முறை ஐநா மனித உரிமை குழுவில் உறுப்பு நாடாக தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நியூயார்க்கில் செய்தியாளர்களை சந்தித்த இந்தியாவின் ஐநாதூதர் சையத் அக்பரூதீன், இந்தியாவுக்கு வாக்களித்த நாடுகளுக்கு நன்றி.மனித உரிமைகளை காப்பதில் இந்தியா உறுதியுடன் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்