இந்தியாவின் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் சித்திக் அகமது டேனிஷ் இலங்கையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் .ஈஸ்டர் தின குண்டு வெடிப்பிற்கு பின் செய்தி சேகரிக்க சென்றதால் சித்திக் கைது செய்யப்பட்டுள்ளார் .இவர் நீர் கொழும்பு நகரில் உள்ள ஒரு பள்ளியில் அனுமதியின்றி நுழைய முயற்சித்த போது கைது செய்யப்பட்டார் .இவரை இலங்கை காவல் துறையினர் உடனடியாக நீர்கொழும்பு நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் .

இலங்கையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இறந்த மாணவியை பற்றிய செய்தியை சேகரிக்க சென்றுள்ளார் என இலங்கை உள்ளூர் பத்திரிக்கை நிறுவனங்கள் செய்தி வெளியிடுள்ளனர் . மேலும் இவர் இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க சித்திக்கை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இலங்கைக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது . மேலும் இலங்கையில் தற்போது கடுமையான விதிகள் அமலில் இருப்பதால் கடும் சோதனைக்கு பின்னரே முக்கிய இடங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர் . அதே போல் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக சர்வதேச நாடுககள் விசாரணை நடத்தி வருகின்றனர் . தமிழகத்தில் கூட மத்திய புலனாய்வு அதிகாரிகள் முகாமிட்டு பல்வேறு மாவட்டங்களில் தீவிர விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது .இது தொடர்பாக சென்னை , கேரளாவில் தீவிரவாத தொடர்பில் உள்ளவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகிறது மத்திய புலனாய்வு துறையினர் .