Skip to main content

இலங்கையில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது அவசரநிலை! 

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

Emergency declared in Sri Lanka from midnight

 

இலங்கையில் பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் என நாடு முழுவதும் கொந்தளிப்பில் உள்ள நிலையில், நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

 

இலங்கையில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என அன்றாட வாழ்வுக்கே வழியற்ற சூழல் நிலவுகிறது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் பொதுமக்கள் ஆவேசத்துடன் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

அதிபர் அலுவலகம் முன் முற்றுகையிட்டு ஒரு மாதமாகத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் போராடி வருகின்றனர். பற்றி எரியும் நெருப்பைப் போல நாடு முழுவதும் பல்வேறு வகைகளில் போராட்டங்கள் நடந்து வருவதால், பதற்றம் தணியாத சூழல் நிலவுகிறது. 

 

இந்த நிலையில், இலங்கை முழுவதும் நள்ளிரவு முதல் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, கடந்த மாத தொடக்கத்தில் சுமார் ஒருவாரம் அவசரநிலை அமலில் இருந்து பின்னர் திரும்பப் பெறப்பட்டது என்பது நினைவுக் கூறத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்