சுகாதார செயல்பாடுகளில் அண்டை நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![health](http://image.nakkheeran.in/cdn/farfuture/-c1LvPngFws14wBlQuuFVE5Jfc3XQgXOKW-MPcK50Js/1533347652/sites/default/files/inline-images/health.jpg)
லென்செட் என்ற ஆய்வறிக்கை உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் மருத்துவ சுகாதாரத்தின் தரம் குறித்து விளக்குகிறது. அதில், மொத்தமுள்ள 195 நாடுகளில் இந்தியா 145ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா(48), வங்காளதேசம்(133), இலங்கை(71) மற்றும் பூடான் (134) ஆகியவற்றை விடவும் மிகவும் பின்தங்கியிருப்பதாக அது தெரிவிக்கிறது.
இருப்பினும், நோய்க்கான உலகளாவிய சுமை என்ற ஆய்வறிக்கை இந்தியாவின் சுகாதார செயல்பாடுகள் குறித்த மாறுபட்ட தகவலைத் தெரிவிக்கிறது. அதன்படி, 1990ஆம் ஆண்டில் இருந்து சுகாதார செயல்பாடுகளில் அதீத வேகத்துடன் இந்தியாவின் செயல்பாடுகள் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, 2000 முதல் 2016 வரை அதன் வேகம் கணிப்புகளை விட அதிகமாக இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லென்செட் ஆய்வறிக்கையின் படி, உலகளவில் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. நேபாளம் (149), பாகிஸ்தான் (154) ஆப்கானிஸ்தான் (191) ஆகிய இடங்களில் உள்ளன.