
உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேற நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார் .
ளூம்பெர்க் என்ற பத்திரிகைக்கு அவர் கொடுத்த பேட்டியில் உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்காவிற்கு அநீதி இழைக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள டிரம்ப் இந்த அநீதிகள் அரங்கேற உலக வர்த்தக அமைப்பு அனுமதிப்பதாகவும் குறைகூறியுள்ளார்.
இந்தநிலை நீடித்தால் அல்லது உலக வர்த்தக அமைப்பு தனது போக்கை மாற்றிக்கொள்ள மறுத்தால் உலக வர்த்தக அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேற நேரிடும் என எச்சரித்தார். மேலும் அந்த அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் டிரம்ப்.