Skip to main content

வடகொரியாவை சீண்டினால் ஆபத்து - ட்ரம்ப்புக்கு ஹிலாரி கிளிண்டன் எச்சரிக்கை!

Published on 19/10/2017 | Edited on 19/10/2017
வடகொரியாவை சீண்டினால் ஆபத்து - ட்ரம்ப்புக்கு
ஹிலாரி கிளிண்டன் எச்சரிக்கை!



வடகொரியாவுக்கு போர் அச்சுறுத்தல் விடுத்து சீண்டுவது மிகவும் அபாயகரமானது என்று ஹிலாரி கிளிண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்று பேசிய ஹிலாரி கிளிண்டன் கூறியது....

வடகொரியா விவகாரத்தில் போரை நாடுவதாலும், ஆவேசமாக இருப்பதாலும் எந்த பயனும் இல்லை. அந்த நாட்டிற்கு போர் அச்சுறுத்தல் விடுப்பது அபாயகரமானது. இவ்விவகாரத்தில் குறுகிய பார்வையோடு செயல்பட கூடாது. அது அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் என எந்த நாடாக இருந்தாலும் சரி. இந்த விவகாரத்தில் நிதானமாக செயல்பட வேண்டும். வடகொரியா மீதான தடையை வீவிரமாக அமல்படுத்த சீனா தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்றார்.

ஐ.நா மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஆயுத பரிசோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியாவின் நடவடிக்கையால் அமரிக்காவுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவின் செயல்பாடுகள் அமெரிக்காவிற்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் அடிக்கடி வார்த்தை போரில் ஈடுபட்டு ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் இந்த நிலையில் ஹிலாரி இப்படி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்