பாகிஸ்தானில் ஜூலை 25 -ஆம் தேதி பொதுத்தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் கட்சி தேர்தல் பரப்புரையின் போது தீவிரவாத அமைப்புகளால் வெடிக்க செய்யப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 133 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இனி ஜூலை 15-ஆம் தேதி துக்கநாளாக அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தென்மேற்கு பகுதியில் பலுகிஸ்தானில் அவாமி கட்சியின் தேர்தல் பிரச்சாரம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் அங்கு கூட்டத்தில் புகுந்த மனித வெடிகுண்டு வெடித்து 70 பேர் சம்பவ இடத்தியிலேயே பலியாகினர். மேலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 54 பேர் தொடர்ந்து பலியாகி பலி எண்ணிக்கை 124 ஆக இருந்தது. இறுதியில் பலி எண்ணிக்கை 133-ஐ தொட்டது.
அதேபோல் பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியிலுள்ள பன்னு என்ற இடத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மனித வெடிக்குண்டு தாக்குதலுக்கு சில பயங்கரவாத அமைப்புகள் பொறுப்பேற்றுவந்த நிலையில் இந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்தியா,அமெரிக்கா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துவந்தன.
தேர்தல் நடக்கவிருக்கும் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்த சம்பவத்தில் அவாமி கட்சியின் பலுகிஸ்தான் வேட்பாளர் மீர் சிராஜ் கொல்லப்பட்டார். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் நாசிருல் முல்க் இஸ்லமாபாத்தில் நேற்று பேசுகையில் இனி ஜூலை 15 துக்கதினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்தார்.