Published on 07/01/2022 | Edited on 07/01/2022

இத்தாலி நாட்டை சேர்ந்த மாஃபியா குழு ஒன்றின் உறுப்பினரான ஜியோஅச்சினோ காமினோ என்ற நபர் 20 வருடங்களாக அந்தநாட்டு போலீஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் தற்போது கூகுள் மேப்பினால் சிக்கிக் கொண்டுள்ளார். கூகுள் மேப்பின் ஸ்ட்ரீட் வியூ புகைப்படத்தில் ஒரு பழக்கடையின் வாசலில் ஜியோஅச்சினோ காமினோவை போல ஒரு நபர் நிற்பது போல இருந்துள்ளது.
அந்த புகைப்படத்தை தொடர்ந்து 2 வருடமாக தீவிர விசாரணை நடத்திய இத்தாலி போலீஸார், ஜியோஅச்சினோ காமினோ ஸ்பெயினில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஸ்பெயின் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அடுத்த மாத இறுதிக்குள் இத்தாலி கொண்டுவரப்படுவார் என இத்தாலி போலீஸார் தெரிவித்துள்ளார்.