Skip to main content

நேபாளம் காத்மண்டுவில் விமானவிபத்து! - 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

Published on 12/03/2018 | Edited on 12/03/2018

வங்காளதேசத்தில் இருந்து காத்மண்டுவில் உள்ள விமானநிலையத்திற்கு வந்துகொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானது.

 

நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் உள்ளது திருபுவான் விமானநிலையம். வங்காளதேசம் தாக்காவில் இருந்து 67 பேரை ஏற்றிக்கொண்டு இந்த விமானநிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த யூ.எஸ்.-பங்க்ளா ஏர்லைன்ஸ் விமானம், அதற்கு அருகாமையிலுள்ள கால்பந்து மைதானத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. கரும்புகை சூழ்ந்திருந்த நிலையில் ஏராளமானோர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

 

 

விமானத்தில் பயணித்த 67 பேரில் 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானம் முழுவதும் சேதமடைந்துள்ள நிலையில், மீதமிருந்த பயணிகள் உடல் கருகி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

 

விமானம் தரையிரங்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும், விமானத்தில் பயணித்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் திருபுவான் விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். விபத்து நடந்துள்ளதை அடுத்து விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்