‘பேஸ்புக் மக்களை இணைக்காமல் பிரித்துவிட்டது’ - மன்னிப்பு கேட்ட மார்க்!
சமூக வலைதளங்களில் முன்னோடியான முகநூல் என அழைக்கப்படும் பேஸ்புக், மக்களை இணைக்கத் தவறிவிட்டதாகக் கூறி, அதை உருவாக்கியவரும் அந்த நிறுவனத்தின் செயல் அதிகாரியுமான மார்க் சுகர்பெர்க் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
பேஸ்புக் வலைதளம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த வலைதளம் உருவாக்கப்பட்டபோது, சமூகத்தில் உள்ள மக்களை இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாகவும், ஆனால் அதைச்செய்யாமல் பிரித்துவிட்டதாகவும் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், இனிவரும் காலங்களில் தனது குறைகளில் இருந்து மீண்டு தன்னை மேம்படுத்திக்கொண்டு செயல்படுவதாகவும் அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் அமெரிக்காவின் அதிபர் தேர்தலின் போது, முகநூலில் ஒரு பொய்யான செய்தி பரவியது. அதிபர் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட திருப்பங்களுக்கு அந்தச் செய்தியும் காரணமான ஒன்றாக இருந்துள்ளது என மார்க் சுகர்பெர்க் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
- ச.ப.மதிவாணன்