அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் (05-11-24) நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் போட்டியில் உள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ் 224 வாக்குகளைப் பெற்றார். முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் 277 வாக்குகளைப் பெற்று அமெரிக்காவின் அதிபராகிறார். அமெரிக்கா அதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் 270 வாக்குகள் பெற்றால் வெற்றி எனும் பட்சத்தில், டொனால்ட் டிரம்ப் 277 வாக்குகள் பெற்று அமெரிக்காவின் 47வது அதிபராகிறார்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று பதவியில் இருந்த டொனால்ட் டிரம்ப், 2020ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த அதிபர் தேர்தலில், மீண்டும் களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை பிடித்து அபார வெற்றி பெற்றுள்ளார்.
அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப்பிற்கு பல்வேறு உலக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் மோடியும் டிரம்புக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்வியை மனமார ஏற்றுக் கொள்வதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார். அமைதியான முறையில் அதிகாரப்பகிர்வை ட்ரம் மேற்கொள்ளுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் கமலா ஹாரிஸ் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் அதிபராகியுள்ளதால் தங்கம் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.