தென் ஆப்பிரிக்காவில் வடமேற்கு பகுதியான காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கத்தால் 33 இறந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் 1976-ஆம் ஆண்டு முதலே எபோலா ஒரு உயிர்கொல்லி நோயாக கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் வடமேற்கு பகுதியிலுள்ள காங்கோ நாட்டின் வடக்கு பகுதில் 22 பேர் எபோலாவால் இறந்துள்ளார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது எபோலோவால் 33 பேர் அங்கு இறந்துள்ளனர் என அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. அதுமட்டுமின்றி 879 பேருக்கு எபோலா தாக்கம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழம் தின்னும் வௌவால்கள் மூலம் பரவும் இந்த எபோலாவிலிருந்து தற்காத்து கொள்ள உலக சுகாதார நிறுவனம் மூலம் தொடர்ந்து மருந்துகள் அனுப்பபட்டாலும் அங்கெ கிளர்ச்சிகள் நடந்து வருவதால் அந்த மருத்தவ பொருட்கள் சரியாக சென்று சேர்வதில்லை என கூறப்படுகிறது. இருந்தும் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்துவருகிறது உலக சுகாதார நிறுவனம்.