இங்கிலாந்தில் ஆளும் போரிஸ் ஜான்சனின் அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள நாடின் டோரிஸ் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். தனக்கு COVID-19 வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நாடின் டோரிஸ் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் 380க்கும் மேற்பட்டோர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஆறு பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மிட் பெட்ஃபோர்ட்ஷையரின் பாராளுமன்ற உறுப்பினரான டோரிஸுக்கு வெள்ளிக்கிழமை உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து அவருக்குச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகளின்படி செவ்வாயன்று அவருக்கு COVID-19 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். இந்த சூழலில், டோரிஸ் கடந்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. டோரிஸுக்கு எவ்வாறு வைரஸ் பாதித்தது என்றும் அவர் மூலம் வேறு யாருக்காவது பரவியதா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.